×

தடிக்காரன்கோணம், கொட்டாரமேடு தேவி  இசக்கியம்மன், பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா

நாகர்கோவில், ஜூன் 14:  தடிக்காரன்கோணம் கொட்டாரமேடு தேவி  இசக்கியம்மன், பத்திரகாளியம்மன், ஒத்தப்பனை சுடலை ஆண்டவர், நீலியம்மன், நாகர் குடும்பம், கணபதி சாமி கோயில் திருவிழா இன்று (14ம் தேதி) தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது.  இன்று (14ம் தேதி) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு  மஹா கணபதி ஹோமம், 8 மணிக்கு காளிகேசம் சென்று காளியம்மன் சன்னதியிலிருந்து மேளதாளத்துடன் திருமஞ்சனம் எடுத்து வருதல், பகல் 12.30 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள் ஆகியவை நடக்கிறது.நாளை (15ம் தேதி) காலை 9 மணிக்கு தர்சன ஆர்த்தி, பகல் 12 மணிக்கு போக ஆர்த்தி, மாலை 4 மணிக்கு கோலப்போட்டி, இரவு 8 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு அர்த்தசாம பூஜை, 12.30 மணிக்கு அம்மனுக்கு ஊட்டு படைத்தல் ஆகியவை நடக்கிறது. 16ம் தேதி காலை 11 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வழிபாடு, 11.30 மணிக்கு தீபாராதனை, பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பூப்படைப்பு, 12.30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல், 12.45 மணிக்கு பக்தர்கள் அனைவரும் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய மஞ்சள, நீர்குடம் மற்றும் அர்ச்சனை தட்டு கொண்டுவருதல், 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சமயசொற்பொழிவு மாநாடு, இரவு 7.30 மணிக்கு கலைநிகழ்ச்சி, 8.30 மணிக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Kotharameed Devi  Isakiyamman ,temple festival ,Pattakaliyamman ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட்